கடந்த 2 மாதங்களாக நடைபெறும் பணியில் இதுவரை எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், விமானம் மாயமாகிய பின்பு அது குறித்த தேடுதலின்போது, கறுப்பு பெட்டியில் இருந்து சிக்னல்கள் கிடைத்துள்ளன. 4 முறை கிடைத்த சிக்னல்களில் 2 சிக்னல்களின் அலைவரிசை மிக குறைந்த அளவில் உள்ளது.எனவே, அவை விமானத்தின் கறுப்பு பெட்டியில் இருந்து வந்திருக்கும் வாய்ப்பு குறைவு என சந்தேகம் எழுந்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலிய கப்பல் படையின் மூத்த அதிகாரி ஜேம்ஸ் லைபிராண்டு கூறுகையில், அமெரிக்க கப்பற்படையின் நீர்மூழ்கியான புளூபின் 21 தேடுதல் பணியின்போது, 4 முறை சிக்னல்கள் கிடைத்ததாக தெரிய வந்தது.
அவற்றில் 2 மிக பலவீனமானதாக இருந்துள்ளது. கடந்த ஏப்ரல் 5ம் தேதி தேடுதல் குழுவினர் 2 சிக்னல்களை கண்டறிந்தனர்.அவற்றின் அலைவரிசை 33.5 கிலோ ஹெர்ட்ஸ் ஆக இருந்துள்ளது. அதன்பின்பு 3 தினங்கள் கழித்து 2 சிக்னல்கள் கிடைத்தன. அவை 27 கிலோ ஹெர்ட்ஸ் ஆக இருந்தன. கறுப்பு பெட்டியானது 37.5 கிலோ ஹெர்ட்ஸ் அலைவரிசை அளவிற்கு சிக்னல்களை அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டவை.
ஆனால், ஏப்ரல் 5ம் தேதி கிடைத்த சிக்னல்கள் சாத்தியம் என்றும்,கறுப்பு பெட்டியின் பலவீனமான பேட்டரிகள் அல்லது ஆழ்கடல் நிலை ஆகியவற்றால் அதன் அலைவரிசை குறைவாக இருந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது. லைபிராண்டு மேலும் கூறும்போது, அலைவரிசை 33 கிலோ ஹெர்ட்ஸ் என்பதில் இருந்து 27 கிலோ ஹெர்ட்ஸ் ஆக குறைவது மிக பெரும் வித்தியாசம் என்றார்.
எனினும், ஏப்ரல் 5ம் தேதி கிடைத்த சிக்னல்கள் கறுப்பு பெட்டியில் இருந்து தான் வந்திருக்க கூடும் என அதிகாரிகள் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அவற்றில் ஒரு சிக்னல் 2 மணி மற்றும் 20 நிமிடங்கள் வரை நீடித்தது குறிப்பிடத்தக்கது. எனவே, ஏப்ரல் 8ம் தேதி கிடைத்த சிக்னல்கள் மாயமான விமானத்தின் சிக்னல்கள் இல்லையென்றால் அது என்னவாக இருக்கும் என்பது குறித்து லைபிராண்டு எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை.
எனினும், நிபுணர்கள் கூறும்போது, சுற்றுப்புறத்தை குறித்து அறிவதற்காக டால்பின்கள் 0.2 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 150 கிலோ ஹெர்ட்ஸ் வரை அலைவரிசை கொண்ட சிக்னல்களை எழுப்பும் திறன் பெற்றவை. அவை தங்களுக்குள் சமூக தொடர்புகளை ஏற்படுத்தி கொள்வதற்காக 0.2 முதல் 50 வரையிலான கிலோ ஹெர்ட்ஸ் அலைவரிசை அளவில் ஒலிகளை எழுப்பும்.அதேவேளையில், ஏதேனும் எச்சரிக்கை தெரிவிக்க வேண்டியிருப்பின் அவை 40 முதல் 150 வரையிலான கிலோ ஹெர்ட்ஸ் அலைவரிசைகளை எழுப்பும் திறன் கொண்டவை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி