செய்திகள்,திரையுலகம் மம்மூட்டியை கல்யாணம் செய்ய ஆசைப்பட்டதாக கூறும் நடிகை!…

மம்மூட்டியை கல்யாணம் செய்ய ஆசைப்பட்டதாக கூறும் நடிகை!…

மம்மூட்டியை கல்யாணம் செய்ய ஆசைப்பட்டதாக கூறும் நடிகை!… post thumbnail image
கேரளா:-நடிகர் மம்மூட்டியுடன் இம்மானுவேல், பிரைஸ் தி லார்ட் படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரேணு மேத்யூ. சமீபத்தில் அவர் பரபரப்பு பேட்டி அளித்தார். அப்போது மம்மூட்டி மீது தீராத காதல் கொண்டிருந்ததுடன் அவரை மணக்க வேண்டும் என்ற கனவில் இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இது பற்றி ரேணு கூறும்போது, என்னை கல்யாணம் செய்துகொள்ள தயாராக இருப்பதாக நிறைய பேர் என்னிடம் விருப்பம் தெரிவித்தார்கள். ஆனால் மணந்தால் மம்மூட்டியைத்தான் மணப்பது என்று நான் எண்ணி இருந்தேன். அதற்காக காத்திருந்தேன். அது கனவாகவே போய்விட்டது என்று ஆதங்கப்பட்டார்.

மம்மூட்டி மகன் துல்கர் சல்மான் இப்போது ஹீரோவாக நடிக்க வந்துவிட்டார். இந்நிலையில் தனது காதலை அவர் வெளிப்படுத்தியிருப்பது மல்லுவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ரேணுவின் இளமை பருவ காதலா அல்லது சமீபத்தில் ஏற்பட்ட காதலா என்பதை கூற அவர் மறுத்துவிட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி