செய்திகள்,திரையுலகம் சிம்புவை காதலிக்கவில்லை என நயன்தாரா அறிவிப்பு!…

சிம்புவை காதலிக்கவில்லை என நயன்தாரா அறிவிப்பு!…

சிம்புவை காதலிக்கவில்லை என நயன்தாரா அறிவிப்பு!… post thumbnail image
சென்னை:-நடிகை திரிஷா அளித்த பிறந்த நாள் விருந்தில் சிம்புவும், நயன்தாராவும் பங்கேற்றனர். இருவரும் அருகருகே உட்கார்ந்து சிரித்து பேசியபடி விருந்து சாப்பிட்டதாக கூறப்பட்டது. பின்னர் கட்டிப்பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இந்த படங்கள் இன்டர் நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இருவரும் ஏற்கனவே வல்லவன் படத்தில் நடித்தபோது காதல் வயப்பட்டனர். பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார்கள்.அதன் பிறகு பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் வரை வந்தார்கள். ஆனால் நடக்கவில்லை. இந்த காதலும் முறிந்தது. இதுபோல் சிம்புவுக்கும் ஹன்சிகாவுக்கும் காதல் ஏற்பட்டது. அதுவும் சில மாதங்களிலேயே முறிந்து போனது.தற்போது சிம்புவும் நயன்தாராவும் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தான் திரிஷாவின் பிறந்த நாள் விருந்தில் பங்கேற்று நெருக்கம் காட்டி உள்ளனர். இருவருக்குள் திரும்பவும் காதல் மலர்ந்துள்ளது என்று திரையுலகினர் மத்தியில் பேச்சுக்கள் கிளம்பியது.இதற்கு நயன்தாரா பதில் அளித்துள்ளார். அவர் கூறும்போது, சிம்புவுடன் எனக்கு எந்த உறவும் இல்லை. திரிஷா பிறந்த நாள் விருந்தில் சிம்புவை சந்தித்தேன். நாங்கள் ஒன்றாக விருந்தில் கலந்து கொள்ளவில்லை என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி