சீனாவின் தணிக்கைக் குழு தன்னுடைய மறுப்பிற்கான எந்தக் காரணங்களையும் வெளியிடாதபோதும் இந்தப் படத்தைத் திரையிட மறுப்பு தெரிவித்துள்ள பெரும்பாலான முஸ்லிம் நாடுகளின் ஒற்றுமைத்தன்மையே இதில் வெளிப்படுவதாக அமைந்துள்ளது என்று கருதப்படுகின்றது.கடந்த சில வருடங்களாக சீனாவில் கிறிஸ்துவ கலாச்சாரங்களுக்கும், பைபிளுக்கும் மதிப்பு அதிகரித்துவருவதுகூட நாத்திக மனப்பான்மை கொண்ட சீன அரசின் மறுப்பிற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்றும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சீனாவின் டுவிட்டர் தகவல்களில் மாவோ சே துங்கின் மேற்கோள்களைவிட பைபிள் குறித்து மக்கள் தேடியுள்ளது அதிகமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா இந்தப் படத்தைப் பற்றிய பாராட்டுதல்களையே முன்னர் வெளியிட்டிருந்தது.அதுபோல் அங்கு ஏப்ரல் இறுதியில் இப்படம் திரையிடப்படும் என்ற செய்தியையும் அது தெரிவித்திருந்தது. எனவே தணிக்கைக்குழு வெளியிட்டுள்ள மறுப்பு கடைசி நிமிடத் தீர்மானமாக இருக்கவேண்டும் என்று கருதப்படுகின்றது.பைபிள் கதையை பெரிய திரையில் உண்மையாக வெளிப்படுத்தும் விதத்தில் நோவா மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, அமைதி, மனித இயல்பு, இரக்கம், தீமை மற்றும் மீட்பு செய்திகளை உள்ளடக்கிய விதத்தில் இந்தப் படம் ஒரு காவியமாக விளங்கும் என்று சீன செய்தி நிறுவனம் முன்பு குறிப்பிட்டிருந்தது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி