செய்திகள் 2600 ஆண்டுகள் பழமையான எகிப்து குழந்தை மம்மி!…

2600 ஆண்டுகள் பழமையான எகிப்து குழந்தை மம்மி!…

2600 ஆண்டுகள் பழமையான எகிப்து குழந்தை மம்மி!… post thumbnail image
கெய்ரோ:-கடந்த 100 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட ‘குழந்தை மம்மி’ ஒன்று போலியானதாக இருக்கலாம் என தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதினர்.அதற்கு காரணம் அந்த மம்மியை சுற்றி போர்த்தி வைக்கப்பட்டிருந்த எகிப்தியரின் சித்திர வடிவ எழுத்துக்கள் தான். இந்த குழப்பம் காரணமாகவே 2600 ஆண்டு பழமை வாய்ந்ததும், 52 செ.மீ நீளம் கொண்ட அந்த குழந்தை மம்மி போலி என கருதப்பட்டது.

ஆனால் வல்லுனர்கள் அந்த மம்மியை தற்போது சி.டி.ஸ்கேன் செய்து பார்த்ததில் அது உண்மையானது தான் என கண்டுபிடித்தனர். இதன் மூலம் பழங்கால எகிப்தியர்கள் பிறக்காத குழந்தைகளை கூட மம்மிகளாக்கியிருக்கிறார்கள் என தெரியவந்துள்ளது.

இது குறித்து எகிப்தை சேர்ந்த வல்லுனரான கரோலின் கிரேவ்ஸ் பெரௌன் கூறுகையில், பழங்காலங்களில் பெருமளவிலான குழந்தைகள் பிறந்தவுடன் இறந்து போனாலும், கருவிலேயே சிதைந்து போனாலும் அதை சாதாரணமாக பார்க்காமல் அவைகளை பாதுகாப்புடன் புதைத்து வைத்துள்ளனர் என்பதை தான் இந்த மம்மி குழந்தை நமக்கு புரிய வைத்துள்ளது என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி