அமெரிக்க ராணுவத்தின் புளூபின் 21 என்ற சிறிய நீர்மூழ்கி தொழில்நுட்பக் கருவியுடன் ஆஸ்திரேலியக் கப்பலான ஓஷன் ஷீல்ட் இன்று பெர்த் துறைமுகத்திலிருந்து கிளம்புவதாக தேடுதல் மைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.தெற்கு இந்தியப் பெருங்கடலில் மூன்று நாட்கள் பயணித்து கருப்புப்பெட்டியிலிருந்து சிக்னல் கிடைத்த இடத்தை அடைந்து மீண்டும் கடற்பரப்பின் ஆழத்தில் தேடும் பணியில் ஈடுபட உள்ளதாக அந்தக் கப்பலில் பயணிக்கும் அமெரிக்க கடற்படை கேப்டன் மார்க் மாத்யூஸ் கூறினார்.
கிடைக்கும் அறிகுறிகளை வைத்து முயன்றவரை தங்கள் பணியைத் தொடர இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
கடலில் கிடைத்த சமிக்ஞைகளைக் கொண்டு அவை விமானத்தின் கறுப்புப் பெட்டியிலிருந்து கிடைத்தவை என்பதை உறுதியாகக் கூறமுடியாது. அது நிச்சயமாக மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சமிக்ஞை ஆகும். ஆயினும் இதனால் காணாமல் போன விமானத்தைப் பற்றிய தகவல்கள் கிட்டுமா என்பது தெளிவாக இல்லை என்பதையும் அவர் கூறினார்.பரந்து விரிந்திருக்கும் இந்தியப் பெருங்கடலில் வான் மற்றும் கடல்வழி தேடல்களில் இதுநாள் வரை எந்தவித பலனும் கிட்டாதபோதும் ஆஸ்திரேலியா தாங்கள் சரியான பாதையிலேயே தேடுதல் பணியைத் தொடருவதாக நம்பிக்கை கொண்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி