செய்திகள்,திரையுலகம் மது, சிகரெட்டுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகைக்கு கண்டனம்!…

மது, சிகரெட்டுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகைக்கு கண்டனம்!…

மது, சிகரெட்டுடன் கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகைக்கு கண்டனம்!… post thumbnail image
மும்பை:-பாலிவுட்டில் முன்னனி நடிகையான கங்கனா ரணாவத் தமிழில் ஜெயம்ரவி ஜோடியாக ‘தாம்தூம்’ படத்தில் நடித்துள்ளார்.இவர் சமீபத்தில் ஒரு ஆங்கில பத்திரிகைக்கு கவர்ச்சி போஸ் கொடுத்தார்.

அதில் ஆபாச உடையில் புகை பிடிப்பது போன்றும், மது அருந்துவது போன்றும் போஸ் கொடுத்து உள்ளார்.கங்கனா ரணாவத், இதுபோல் போஸ் கொடுத்து இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று மும்பையில் உள்ள மகளிர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் நடிகைகள் பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படக் கூடாது.

சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். பணத்துக்காக கலாசார சீரழிவுக்கு வித்திடும் வகையில் நடிகைகள் இதுபோல் போஸ் கொடுப்பது தொடர்ந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம் என்று தெரிவித்துள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி