‘ரிவர்ஸ் ஸ்லாக்’ வகையிலான ஷாட்டுகளை அடிப்பதற்கு நீங்களும் முயற்சிக்க முடியும். ஆனால் அடுத்தடுத்து இரண்டு முறை ‘ரிவர்ஸ் ஸ்லாக்’ ஷாட்டில் சிக்சர் அடிப்பதற்கு உண்மையிலேயே அபார திறமை தேவை. அது மேக்ஸ்வெல்லிடம் இருக்கிறது.
இவர் மிகவும் ஒரு வித்தியாசமான வீரர். தெண்டுல்கர் அல்லது ஷேவாக்குடன் ஒப்பிடும் வகையில் மேக்ஸ்வெல்லின் ஆட்டத்திறமை அமைந்துள்ளது. எங்கள் அணியின் தோல்விக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் தான் காரணம். அவர்கள் தான் ரன்களை வாரி வழங்கி விட்டனர்.
முதல் 10 ஓவர்களில் பஞ்சாப் வெறும் 70 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் அடுத்த 10 ஓவர்களில் ஆட்டத்தை 40 ஓவர் போட்டி போன்று மேக்ஸ்வெல் மாற்றி விட்டார். எங்களுக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்திருந்தால் இலக்கை சேசிங் செய்திருக்கலாம்.ஆனால் முதல் ஓவரிலேயே வெய்ன் சுமித் ஆட்டம் இழந்து விட்டார். அதன் பிறகு ரவீந்திர ஜடேஜா வெளியேறியதும், இனி கடைசி வரை தாக்குப்பிடித்து விளையாடுவது என்று முடிவு செய்து ஆடினோம்’ என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி