லண்டன்:-ஐபிஎல் மற்றும் 20 ஓவர் போட்டிகள் சிக்ஸர்களால் தான் இவ்வளவு பிரபலம் அடைந்துள்ளன. அடிக்கடி சிக்சர் பறக்கும் அதிரடி கிரிக்கெட்டை பார்க்கத்தான் ரசிகர்களும் விரும்புவர்.
ஆனால்,இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷையரில் உள்ள பிரிட்வெல் சாலோம் கிரிக்கெட் அணியினர் அப்பகுதியில் அடிக்கடி கிரிக்கெட் விளையாடுவர். அப்போது இந்த வீரர்கள் சிக்சர் அடித்தால், பந்து அருகே உள்ள தோட்டத்தில் போய் விழும். எனவே அந்த பந்தை எடுக்க வீரர்கள் அடிக்கடி தோட்டத்துக்குள் நுழைந்ததால், அந்த தோட்டம் சேதமடைந்தது.
பொறுத்து பொறுத்து பார்த்த தோட்டக்காரர், கிரிக்கெட் அணியினரை கோர்ட்டில் கொண்டுபோய் நிறுத்திவிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதியும், கிரிக்கெட் அணியினர் சிக்சர் அடிக்க தடை விதித்து தீர்ப்பு வழங்கி விட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி