செய்திகள்,திரையுலகம் கிரிக்கெட் வீரர் அசாருதீன் மனைவி மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்!…

கிரிக்கெட் வீரர் அசாருதீன் மனைவி மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்!…

கிரிக்கெட் வீரர் அசாருதீன் மனைவி மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்!… post thumbnail image
மும்பை:-இந்திப்பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் சங்கீதா பிஜ்லானி. இவர் 1990ம் ஆண்டுகளில் கிரிக்கெட்டில் பிரபலமாக விளங்கிய அசாருதீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.அத்துடன் நடிப்புக்கும் முழுக்குப் போட்டார்.

இந்நிலையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து சங்கீதா பிஜ்லானி மீண்டும் சினிமாவில் நடிக்கிறார்.‘ஷாப்’ என்ற படத்தில் நடிகர் சல்மான்கானுடன் சேர்ந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த ஆண்டு மும்பையில் அனிதா டோங்கிரி நடத்திய பேஷன் ஷோவுக்கு நடிகை சங்கீதா பிஜ்லானி வந்திருந்தார். அப்போது அவரை படத்தயாரிப்பாளர் ஓனிர் சந்தித்து மீண்டும் சினிமாவில் நடிக்கிறீர்களா.என்று கேட்டார். அதற்கு சம்மதிக்கவே உடனே சங்கீதாவை தனது புதுப்படத்துக்கு ஒப்பந்தம் செய்து விட்டார்.

மீண்டும் நடிப்பது பற்றி சங்கீதா பிஜ்லானி கூறுகையில், 20 ஆண்டுகள் கழித்து சினிமாவுக்கு வந்தாலும் ஏற்கனவே நடித்த அனுபவம் இருக்கிறது, என்றாலும் ஒரு புதுமுகமாக கேமரா முன் நிற்பதாக உணர்கிறேன். மீண்டும் நடிப்பதை சந்தோஷமாக உணர்கிறேன். நான் மிதுன் சக்கரவர்த்தியுடன் ஜோடியாக பல படங்களில் நடித்து இருக்கிறேன். தற்போது படத்தில் நடிக்கும் சல்மான்கானுடன் இதற்கு முன்பு எனக்கு எந்த தொடர்பும் இல்லை கதைக்கு ஏற்றபடி நடிக்கிறேன் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி