சண்ட மாருதம் படத்தில் டைரக்டர் சமுத்திரக்கனியும் முக்கிய கேரக்டரில் வருகிறார். விஜயகுமார், ராதாரவி, இமான் அண்ணாச்சி, டெல்லி கணேஷ், காதல் தண்டபாணி, ஆதவன், பாபூஸ், அவினாஸ், மாளவிகா, கானா உலகநாதன், ஆகியோரும் நடிக்கின்றனர். பிரபல கன்னட நடிகர் அருண்சாகரும் இதில் அறிமுகமாகிறார். இவர்களுடன் ராதிகா சரத்குமார் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.இப்படத்தை ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். சரத்குமார் கதை எழுதுகிறார். எழுத்தாளர் ராஜேஷ்குமார் திரைக்கதை எழுதுகிறார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார்.
படம் பற்றி ஏ.வெங்கடேஷ் கூறும் போது புயல், சுனாமி போன்றவற்றை தாண்டி அசுர வேகத்துடன் வீசும் காற்றுக்கு சண்ட மாருதம் என்று பெயர். எவ்வளவு பெரும் தடைகளையும் உடைக்கும் ஆற்றல் அந்த காற்றுக்கு உண்டு. கதைக்கு பொருத்தமாக இருந்ததால் அந்த தலைப்பை சூட்டினோம்.என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி