ஊர்வசிக்கும் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயனுக்கும் 2000ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தேஜா லட்சுமி என்ற மகள் இருக்கிறார்.2008ல் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுவிட்டனர். இந்நிலையில் ஊர்வசி கடந்தாண்டு சென்னையை சேர்ந்த தொழிலதிபர் சிவபிரசாத்தை 2வது திருமணம் செய்துகொண்டார்.சிவபிரசாத்தை திருமணம் செய்த பிறகு எந்த கவலையும் இல்லாமல் மிகவும் சந்தோஷமாக வாழ்கிறேன் என்று கூறினார் ஊர்வசி.
ஆனால் தற்போது 46 வயதான ஊர்வசி கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.ஊர்வசியின் இரண்டாவது கணவர் சிவபிரசாத், மனைவி ஊர்வசியின் கர்ப்பம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்ததாக கேரள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி