சென்னை:-ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கும் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ ஒரு ஆண்டுக்கு மேலாகியும் வெளிவருவதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது.ஜெய், நஸ்ரியா நடிக்கும் இந்தப் படத்தை அனீஷ் இயக்கி இருக்கிறார்.
ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார். லோகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்து பையன் இஸ்லாமியராக நடித்தும், இஸ்லாமிய பெண் இந்து பெண்ணாக நடித்தும் காதலிக்கிற கதை. கடைசியில் உண்மை தெரிய வரும்போது என்ன நடக்கிறது என்பது சுவாரஸ்யமான திருப்பம். படத்தின் முன்னோட்டமும், பாடல்களும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்போது மே 15ம் தேதி படம் வெளிவருவதாக அறிவித்து இருக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி