சென்னை:-அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் ‘சத்யா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கௌதம் மேனன் படத்திற்கு பிறகு அஜித் இயக்குனர் சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து, சுந்தர்.சி. மனைவியும், நடிகையுமான குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் அஜித்,சுந்தர்.சி விரைவில் இணையவிருக்கிறார்கள் என்று செய்தி வெளியிட்டுள்ளார்.
சுந்தர்.சி தற்போது ‘அரண்மனை’ படத்தில் பிசியாக இருப்பதால் கௌதம் மேனன் படத்தை முடித்துவிட்டு சுந்தர்.சியுடன் அஜித் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, சுந்தர்.சி. இயக்கத்தில் அஜீத் ‘உன்னைத் தேடி’ என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி