கராச்சி:-பாகிஸ்தானில் இந்து மாகாணத்தில் உள்ள தவுர் பகுதியில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஒரு மணி நேரத்தில் மீண்டும் மற்றொரு நில நடுக்கம் ஏற்பட்டது.
இதனால் வீடுகள் குலுங்கின. தூங்கி கொண்டிருந்த மக்கள் அதிர்ச்சியில் எழுந்து வெளியே ஓட்டம் பிடித்தனர். வீட்டின் கூரைகள் இடிந்து விழுந்தன. அதில் ஒருவர் உடல் நசுங்கி பலியானார். 30 பேர் காயம் அடைந்தனர். இதற்கிடையே 4.5. மற்றும் 4.6 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி