சென்னை:-நடிகை காஜல் அகர்வால் 2008ல் ‘பழனி’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்பு பொம்மலாட்டம், மோதிவிளையாடு படங்களில் நடித்தார். தெலுங்கில் நடித்த மகதீரா படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது.
அதன் பிறகு படங்கள் மளமளவென குவிந்தன. தமிழில் நடித்த துப்பாக்கி, நான் மகான் அல்ல, மாற்றான், ஜில்லா படங்கள் முன்னணி நடிகையாக்கியது. இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் குவிந்தனர். இந்தி படமொன்றிலும் தற்போது நடித்து வருகிறார்.
இந்நிலையில் காஜல் அகர்வால் பேஸ் புக்கில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகை என்ற சாதனை படைத்துள்ளார்.
இவரது பேஸ்புக் வளைதளத்தில் 1 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் சேர்ந்துள்ளனர். காஜல் அகர்வாலுக்கு அடுத்த படியாக சுருதிஹாசனை 62 லட்சம் பேரும், சமந்தாவை 52 லட்சம் பேரும், அனுஷ்காவை 48 லட்சம் பேரும் பேஸ்புக்கில் பின்பற்றுகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி