செய்திகள் கென்யாவில் சாராயம் குடித்த 80 பேர் பலி!…

கென்யாவில் சாராயம் குடித்த 80 பேர் பலி!…

கென்யாவில் சாராயம் குடித்த 80 பேர் பலி!… post thumbnail image
நைரோபி:-ஆப்பிரிக்க நாடான கென்யாவில் பொதுமக்களே ஒருவகை சாராயத்தை தயாரித்து குடிக்கின்றனர். இந்த வகை சாராயத்தை வியாபாரிகள் சிலர் தயாரித்து விற்பனை செய்தனர்.

இந்த சாராயத்தை குடித்த பலர் மயங்கி விழுந்து இறந்தனர். இதுவரை 80 பேர் பலியாகி உள்ளனர். ஏராளமானோருக்கு கண் பார்வை பறிபோய் விட்டது.சாராயம் குடித்ததும் வயிற்றுவலி ஏற்பட்டது. பின்னர் தலை சுற்றல் மற்றும் மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் துடிதுடித்து இறந்தனர்.

இந்த சாராயத்தில் ரசாயன பொருட்களை கலந்திருக்கலாம். இதனால் அது விஷமாக மாறியிருக்கலாம் என விசாரணை நடத்திய அதிகாரிகள் கூறினார்கள். சாராயம் குடித்த மேலும் பலரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி