பெங்களூர்:-இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன். இவர் ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்ட முரளிதரன் இந்த சீசனில் ஒரு ஆட்டத்தில் மட்டும் தான் களம் இறங்கினார்.
இந்நிலையில் இந்த ஆண்டுடன் ஐ.பி.எல். போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக முரளிதரன் அறிவித்துள்ளார். ஓய்வுக்கு பிறகு எந்த பணியிலும் இறங்காததால் ஏற்பட்ட சலிப்பால் தான் 20 ஓவர் போட்டியில் விளையாட முடிவு செய்தேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி