மனுக்கண்ணன், தயாரிப்பு நிர்வாகிகுமரன் காரில் இருக்க டிரைவர் ராஜேஷ் காரை ஒட்டிச் சென்றிருக்கிறார்.கார் அமிஞ்சிக்கரை வந்தது. ஓட்டலில் சாப்பிடலாம் என்ற எண்ணத்தில் காரை ஓரங்கட்டி அமிஞ்சிக்கரையில் ஏடிஎம்மின் அருகே இறங்கியிருக்கிறார்கள். யாரோ ஒருவர் டைரக்டர் சார் உங்களிடம் பேசவேண்டும் என்று கூப்பிட,மனுக்கண்ணன் அருகில் சென்ற போது திடீரென இருவர் பக்கத்து சந்துக்குள் தள்ளி சரமாரியாக நெஞ்சில் தாக்க ஆரம்பித்து இருக்கிறார்கள். நிலைகுலைந்த மனுக்கண்ணன் கீழே விழுந்திருக்கிறார்.
இதைக் கண்ட குமரன், பதறியபடி ஓடிச் சென்று தடுக்க, அவரையும் தாக்கித் தள்ளிவிட்டு அந்த இரண்டு மர்ம நபர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பிவிட்டார்கள். வண்டி நம்பரைக் கவனிக்க முடியாதபடி அதில் துணிசுற்றிக் கட்டப்டடிருந்ததாகச் சொல்கிறார் தயாரிப்பு நிர்வாகிகுமரன்.காயமடைந்த இயக்குநர் மனுக்கண்ணன் மற்றும் குமரன்ஆகியோர் அருகிலுள்ள பில்ராத் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.இயக்குநர் மனுக்கண்ணன் தாக்கப்பட்ட சம்பவம் திரைப்பட இயக்குநர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி