சென்னை:-கே.வி.ஆனந்த் தனுஷை வைத்து ‘அனேகன்’ என்ற படத்தை எடுத்து வருகிறார்.இப்படத்தில் தனுஷ் பல்வேறுபட்ட தோற்றங்களில் மிகவும் வித்தியாசமாக நடித்திருக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை பாண்டிச்சேரியில் தொடங்கிய படக்குழு சென்னை, ஐதராபாத் மற்றும் தெற்காசிய நாடுகளில் எல்லாம் படமாக்கியுள்ளனர்.
இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. கே.வி.ஆனந்தும், ஹாரிஸும் இணைந்து பணியாற்றிய படங்களில் பாடல்கள் பெரும்பாலும் பேசப்படும்.இந்நிலையில், இப்படத்தில் வைரமுத்து வரிகளில் இடம்பெறும் ‘ஆத்தாடி ஆத்தாடி’ என்னும் பாடலை பின்னணி பாடகி பவதாரிணி பாடிக் கொடுத்துள்ளார். இந்த பாடல் இந்த படத்திற்கு மேலும் வலுகூட்டும் என படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி