சென்னை:-சந்தானம் ஹீரோவாக நடிக்கும் படம் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’. ஸ்ரீநாத் இயக்கியுள்ளார். அஸ்னா சவேரி என்ற புதுமுகம் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்துள்ளார். பி.வி.பி. நிறுவனமும், சந்தானத்தின் சொந்த நிறுவனமான ஹோம் மேட் பிலிம்சும் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.
‘கோச்சடையான்’ படம் இந்த வாரம் வெளியாகவிருந்த நிலையில், இப்படத்தை அடுத்த வாரம் 16ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால், ‘கோச்சடையான்’ படம் வெளியாகாத காரணத்தால் இப்படத்தை வருகிற 10ம் தேதியே வெளியிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தை பார்த்த ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா படத்தை தானே வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார். இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி