செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் பெப்சி, கோக் குளிர்பானங்களில் இருந்த சர்ச்சைக்குரிய வேதிப்பொருளை நீக்க முடிவு!…

பெப்சி, கோக் குளிர்பானங்களில் இருந்த சர்ச்சைக்குரிய வேதிப்பொருளை நீக்க முடிவு!…

பெப்சி, கோக் குளிர்பானங்களில் இருந்த சர்ச்சைக்குரிய வேதிப்பொருளை நீக்க முடிவு!… post thumbnail image
நியூயார்க்:-அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல குளிர்பான நிறுவனங்களான கோககோலா, பெப்சியின் பல தயாரிப்புகள் சந்தையில் வெற்றிகரமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. கோககோலா நிறுவனத்தின் பவரேட், ஃபாண்டா, பெப்சியின் கடோரேட், மவுண்டன் டியு போன்ற பல பானங்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கின்றன. இத்தகைய பானங்களில் குறிப்பிடப்படும் பழத்தின் சுவை சமமாகப் பரவுவதற்காக இவற்றில் பிராமினேட்டட் தாவர எண்ணெய் என்ற மூலப்பொருள் உபயோகிக்கப்பட்டு வருகின்றது.

இந்த எண்ணெய் தீ பரவாமல் இருப்பதற்காக மர சாமான்களின்மீது பூசப்படும் வேதிப் பொருட்களை போன்ற தன்மை உடையது என்ற ஒரு புகார் சமீபத்தில் மிஸிஸிப்பி மாகாணத்தில் வாழும் சாரா கவநாக் என்ற இளம்பெண்ணால் அளிக்கப்பட்டுள்ளது. எனவே இத்தகைய வேதிப்பொருட்களின் உபயோகம் குளிர்பானங்களில் நீக்கப்படவேண்டும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை பூர்த்தி செய்தபின்னரே இந்த எண்ணெய் தங்களின் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகின்றது என்று இந்த நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

இருப்பினும், இயற்கையான மூலப்பொருட்கள் பயன்படுத்தப்படுவது குறித்து மக்கள் கவனம் செலுத்துவதால் பல தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் உணவுத் தயாரிப்புகளில் இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளனர்.மக்களின் இயற்கைப் பொருட்கள் பயன்பாட்டின் முன்னுரிமைக்கும் விற்பனைப் போட்டிகளை எதிர்கொள்ளும்விதமாகவும் இரு நிறுவனங்களும் தங்களின் தயாரிப்புகளில் இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதை நிறுத்த இருப்பதாக தெரிவித்துள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி