செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் எப்போதும் இளமையாக தோன்ற புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு!…

எப்போதும் இளமையாக தோன்ற புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு!…

எப்போதும் இளமையாக தோன்ற புதிய சிகிச்சை முறை கண்டுபிடிப்பு!… post thumbnail image
லண்டன்:-முதியவர்களுக்கு இளைஞர்கள் அல்லது இளம் பெண்களின் ரத்தத்தை செலுத்துவதன் மூலம் கடந்து போன இளமைப் பருவத்தை மீண்டும் பெற முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.தற்போது எலிகளிடம் மட்டும் இந்த சோதனையை செய்து பார்த்துள்ளனர்.

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமெரிக்க டாக்டர் டோனி விஸ் கோரே தலைமையிலான குழுவினர் இதுதொடர்பான ஆய்வை 18 மாத எலிக்கு, 3 மாத எலியின் ரத்தத்தை திரும்பத் திரும்பச் செலுத்தி சோதனையிட்டுள்ளனர். இதற்கு வேம்பயர் தெரபி என்று பெயரும் சூட்டியுள்ளனர். இந்த ஆய்வின் முடிவில் இளம் ரத்தம் செலுத்தப்பட்ட வயதான எலிக்கு நினைவாற்றல் அதிகரித்ததாம். இளம் எலி போல சுறுசுறுப்பாகவும் அது செயல்பட்டதாம்.

மேலும் அந்த வயதான எலியின் மூளையில் பல்வேறு குறிப்பிடத்தக்க மாற்றங்களும் காணப்பட்டதாம் இதுகுறித்துக் டாக்டர் டோனி கூறுகையில் எங்களது புள்ளிவிவரத்தின்படி இளம் ரத்தம் செலுத்தப்பட்ட வயதான எலி சுறுசுறுப்பாக இளம் எலி போல செயல்பட்டது. அதனிடம் இளமைத் துடிப்பும் காணப்பட்டது. இதுதொடர்பான ஆய்வுகள் தொடர்கின்றன.மனிதர்களிடம் அடுத்து இந்த சோதனையைச் செய்யவுள்ளோம். இந்த ஆய்வு வயோதிகம் காரணமாக ஏற்படும் பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வுகளைச் சொல்லும் என்று திடமாக நம்புகிறோம் என்றும் வயதானவர்களுக்கு வரும் அல்ஸீமர் நோய்க்கான தீர்வுகள் இதில் கிடைக்கும் என்றும் கூறினார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி