ராஞ்சி:-ஜார்கண்ட் மாநிலம் லோகர்தாக பகுதியில் உள்ள பள்ளியில் கடந்த சனிக்கிழமை மாலை 4 அணி அளவில் ரோஸன் என்ற 8ம் வகுப்பு மாணவன் தன்னுடன் படிக்கும் நண்பர்கள் பங்கஜ்,தப்லு, ராம்விலாஸ் ஆகியோருடன் 6ம் வகுப்பு மாணவி ஒருவரை பள்ளிக்குள் எதையோ எடுக்க வேண்டும் என பொய் சொல்லி அழைத்து சென்று கற்பழித்து உள்ளனர்.
பின்னர் இதை வெளியே சொல்ல கூடாது எனவும் மிரட்டி உள்ளனர். மாணவி முதலில் எதையும் வெளியே கூறவில்லை.மறுநாள் மாணவிக்கு அடிவயிற்றல் கடுமையான வலி ஏற்பட்டு உள்ளது . இதை தொடர்ந்து பெற்றோர்கள் மாணவியிடம் விசாரித்து உள்ளனர்.
அப்போது மாணவி அழுது கொண்டெ உண்மையை கூறி உள்ளார். உடனடியாக பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து 4 மாணவர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி