செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை அடிமைகளாக விற்கபோவதாக தீவிரவாதிகள் மிரட்டல்!…

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை அடிமைகளாக விற்கபோவதாக தீவிரவாதிகள் மிரட்டல்!…

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவிகளை அடிமைகளாக விற்கபோவதாக தீவிரவாதிகள் மிரட்டல்!… post thumbnail image
கனோ:-கடந்த 3 வாரங்களுக்கு முன்பு நைஜீரியாவில் போர்னோ மாகாணத்தில் சிக்பக் என்ற இடத்தில் விடுதியில் தங்கி படித்த 276 மாணவிகளை ‘போகோஹாரம்’ அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.

இதற்கிடையே கடத்தப்பட்ட 53 மாணவிகள் தப்பி விட்டனர். மீதமுள்ள 223 பேர் தீவிரவாதிகளின் பிடியில் உள்ளனர். அரசும், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்தும் மாணவிகளை விடுதலை செய்ய தீவிரவாதிகள் மறுத்து விட்டனர்.
இந்நிலையில் தீவிரவாதிகள் ஒரு வீடியோவை நேற்று வெளியிட்டனர். அதில் தீவிரவாதிகளின் தலைவர் அபுபக்கர் செகாவு பேச்சு இடம் பெற்றிருந்தது. 57 நிமிடங்கள் ஓடிய அந்த வீடியோவில் பேசிய அவர் கடத்தப்பட்ட மாணவிகளை ‘செக்ஸ்’ அடிமைகளாக விற்க போவதாக மிரட்டினார்.

அதற்காக சந்தைகளை அமைத்து ஏலத்தில் விடுவோம் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அரசு மேற்கத்திய கலாசாரம் மற்றும் கல்வியை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.இதற்கிடையே கடத்தப்பட்ட மாணவிகளை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்போம் என அதிபர் ஜோனாதன் உறுதி அளித்துள்ளார். அதற்காக அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் உதவியை அவர் நாடியுள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி