சின்ஜியாங் மாகாணத்தை சீனாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என்று போராடி வரும் முஸ்லிம் தீவிரவாதிகள் இது போன்ற கோரத் தாக்குதலை ஆங்காங்கே நடத்தி வருகின்றனர்.உரும்கி ரெயில் நிலையத்தின் உள்ளே கடந்த மாதம் 30-ம் தேதியன்று நுழைந்த தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி திடீர் தாக்குதல் நடத்தினர். உயிர் பயத்தில் அலறியடித்து ஓடிய மக்களை வாசலில் நீண்ட வாட்களுடன் நின்றிருந்த தீவிரவாதிகள் மடக்கிப் பிடித்து கண்மூடித் தனமாக வெட்டித் தள்ளினர். இச்சம்பவத்தில் 3 பேர் பலியாகினர். 79 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், தெற்கு சீனாவின் குவாங்ஸோ ரெயில் நிலையத்தினுள் இன்று காலை 11 மணியளவில் நுழைந்த தீவிரவாதிகள், ரெயிலுக்காக காத்திருந்த 6 பேரை வெட்டி சாய்த்தனர்.கையில் வாளுடன் தப்பியோட முயன்ற ஒரு தீவிரவாதியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.இச்சம்பவத்தில் காயமடைந்த 3 பெண்கள் உள்பட 6 பேர் குவாங்ஸோ அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி