சிறப்பு விருந்தினராக பரிவார் பவுண்டேஷன் ஜெனரல் மானேஜர் தெய்வம் மற்றும் ரஜினி மன்ற நிர்வாகிகள் சிவகாசி ரமேஷ், மாரி பிச்சை, முருகன், சசிகுமார், குணா, சங்கிலி முருகன், ராமநாதன், பரமக்குடி ஒன்றிய பொறுப்பாளர் ராமச்சந்திரன், கண்ணதாசன் போன்றோர் கலந்து கொண்டனர். கோவிலில் சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. இது குறித்து பால நமச்சி கூறும் போது, ரஜினி உடல் நலம் குன்றி இருந்த போது அவர் நலம் பெற வேண்டி ராமேஸ்வரம் கோவிலில் 3ம் பிரகாரத்தில் 1008 திருவிளக்கு பூஜை நடத்தினோம்.
தற்போது கோச்சடையான் வெற்றி பெற சங்கு பூஜை நடத்தி உள்ளோம். படம் வெற்றி பெற்றதும், ராமேஸ்வரம் கோவில் ஏர்வாடி, தர்கா, சர்ச்களில் 10 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்கப்படும்.விரைவில் ராமேஸ்வரம் தீர்த்தத்தை ஊர்வலமாக எடுத்து போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டில் கொடுப்போம் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி