காபூல்:-ஆப்கானிஸ்தானில் சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, பதக்சான் மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நேற்று மதியம் ஒரு மணியளவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 வீடுகள் மண்ணில் புதைந்தன. அவற்றில் வசித்த சுமார் 2000 பேர் மண்ணுக்குள் புதையுண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதையுண்டவர்களை உயிருடன் மீட்க ஐ.நா. பேரிடர் நிவாரணக் குழுவுனரின் மேற்பார்வையில் ஏராளமான மீட்புப் படையினரும், உள்ளூர்வாசிகளும் கடந்த 20 மணி நேரமாக மண்ணைத் தோண்டி சிலரை மட்டும் உயிருடன் மீட்டுள்ளனர்.
இதுவரை 350க்கும் மேற்பட்ட பிரேதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி