செய்திகள்,திரையுலகம் அஜித்தை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படும் நடிகர்!…

அஜித்தை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படும் நடிகர்!…

அஜித்தை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படும் நடிகர்!… post thumbnail image
சென்னை:-சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த பூவே உனக்காக, லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும், ஷாஜகான், திருப்பாச்சி, ஜில்லா ஆகிய படங்களில் விஜய் நடித்திருந்தார். ஆர்.பி.செளத்ரியின் கம்பெனி எப்போது கால்சீட் கேட்டாலும் உடனே கொடுத்து விடுவார் விஜய்.

ஆனால் அதே சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த நீ வருவாய் என, உன்னைக்கொடு என்னைத்தருவேன் ஆகிய படங்களில் நடித்துள்ள அஜித், சமீபகாலமாக அவர்கள் பேனரில் எந்த படத்திலும நடிக்கவில்லை. அதனால் விரைவில் அஜித்தை வைத்து படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசை எங்களது சூப்பர் குட் பிலிம்சுக்கு உள்ளது என்று நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், எங்கள் நிறுவனத்தில் படம் பண்ணுவதற்காக டைரக்டர்கள் கதை சொன்னதும், அந்த கதையில் யாரை நடிக்க வைத்தால் பொருத்தமாக இருக்கும் என்று பரிசீலனை செய்த பிறகே சம்பந்தப்பட்ட நடிகர்களை அணுகுவோம். அந்த வகையில், எங்களிடம் வரும் கதையில் அஜித்துக்கு பொருத்தமான கதை வருகிறபோது கண்டிப்பாக அவரை வைத்து மீண்டும் எங்கள் நிறுவனம் படம் தயாரிக்கும் அந்த படம் பிரமாண்டமானதாகவும் இருக்கும் என்கிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி