சென்னை:-பழம்பெரும் தயாரிப்பாளரான பி.நாகிரெட்டியின் நினைவாக ஆண்டுதோறும் ஒரு சிறந்த மக்களுக்கு பிடித்த பொழுது போக்கு படத்திற்கு பி.நாகிரெட்டி நினைவு விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2013ம் ஆண்டுக்கான விருது ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்‘ படத்திற்கு வழங்கப்படுகிறது.
இதில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, சூரி, நடித்திருந்தனர், பொன்ராம் இயக்கி இருந்தார். படம் 100 நாட்களை தாண்டி ஓடி வசூலையும் குவித்தது.இன்று மாலை சென்னை காமராஜர் அரங்கில் நடக்கும் விழாவில் தயாரிப்பாளர் ஏவிஎம். சரவணன் விருதை வழங்குகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ் மோஷன் பிக்சர்ஸ் பி.மதன் பெற்றுக் கொள்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி