சென்னை:-ரஜினிகாந்த் நடித்து, அவருடைய மகள் சவுந்தர்யா டைரக்டு செய்த ‘கோச்சடையான்’ படம், வரும் 9ம் தேதி திரைக்கு வர இருக்கிறதுஇந்த படத்தையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்துக்கு, ‘லிங்கா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
ரஜினிகாந்த், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரின் பக்தர். அதற்கு அடையாளமாக தனது மூத்த பேரனுக்கு, ‘லிங்கா’ என்று பெயர் சூட்டினார். பேரனின் பெயரையே தனது புதிய படத்துக்கும் ‘டைட்டிலாக’ வைத்து இருக்கிறார்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா, சோனாக்ஷி சின்ஹா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்கிறார்.தெலுங்கில் பிரபல நடிகராக விளங்கும் ஜெகபதி பாபு ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி