சென்னை:-பாலாவின் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த படம் ‘பரதேசி’. இப்படத்தில் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாகவும், வேதிகா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்துடன், உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வெளிவந்த இப்படம் இந்திய அளவில் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளது.
நார்வேயில் நடைபெற்ற தமிழ் திரைப்பட விழாவில் இந்த படத்துக்கு 4 விருதுகள் கிடைத்துள்ளது. சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த நடிகர் என விருதுகளை அள்ளிச் சென்றது. ‘விடியும் முன்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருது பூஜாவுக்கு கிடைத்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி