செய்திகள்,திரையுலகம் சிம்புவை வம்புக்கு இழுக்கும் நடிகை ஹன்சிகாவின் அம்மா!…

சிம்புவை வம்புக்கு இழுக்கும் நடிகை ஹன்சிகாவின் அம்மா!…

சிம்புவை வம்புக்கு இழுக்கும் நடிகை ஹன்சிகாவின் அம்மா!… post thumbnail image
சென்னை:-‘வாலு’ படத்தில் நடித்தபோது சிம்புவின் காதல் வலையில் விழுந்து கிடந்தார் ஹன்சிகா. அது நீண்டகாலம் நீடிக்கவில்லை.விரைவிலேயே காதலுக்கு முழுக்கும் போட்டு விட்டார்கள்.சிம்பு,ஹன்சிகா நடிக்க வேண்டிய ஒரு பாடல் காட்சி வாலு படத்தில் பேலன்ஸ் இருந்ததால், அவர்களை மீண்டும் ஒன்று சேர்க்க படாதபாடு பட்டு விட்டார் தயாரிப்பாளரான நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி. எப்படியோ ஒருவழியாக எதிரும் புதிருமாக இருந்தவர்களை வைத்து சமீபத்தில் யு ஆர் மை டார்லிங் என்ற ரொமான்டிக்கான அந்த பாடலை படமாக்கி விட்டார்கள்.

சில நாட்களாக,நடிகை ஜெய்பிரதாவின் மகன் சித்துவுடன் ஹன்சிகாவை இணைத்து காதல் செய்திகள் பரவி கிடக்கிறது.இதற்கு காரணம், சிம்புதான். அவர்தான் என் மகளை அசிங்கப்படுத்த வேண்டுமென்று இப்படி கண்ட செய்திகளை மீடியாக்களிடம் பரப்பி விடுகிறார் என்று அவரைப்பார்த்து சீறிக்கொண்டு நிற்கிறார் ஹன்சிகாவின் அம்மா மோனா மோத்வானி.

ஜெயப்பிரதாவிடம் ஏராளமான சொத்துக்கள் இருப்பதால் அவர் மகன் சித்துவுக்கு ஹன்சிகா ப்ராக்கட் போட்டு விட்டதாகவும் அந்த செய்தியோடு சேர்த்து பரவியது.யாருக்கு வேணும் சொத்து.நாங்களும் பெரிய ஜமீன் குடும்பம்தான் என்று கோபமாக பேசுகிறார் மோனா மோத்வானி.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி