செய்திகள்,விளையாட்டு ஐசிசி தரவரிசையில் மீண்டும் ஆஸ்திரேலியா முதல் இடம்!…

ஐசிசி தரவரிசையில் மீண்டும் ஆஸ்திரேலியா முதல் இடம்!…

ஐசிசி தரவரிசையில் மீண்டும் ஆஸ்திரேலியா முதல் இடம்!… post thumbnail image
துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டு உள்ளது.டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியா மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. 5 ஆண்டுக்கு பிறகு அந்த அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்துக்கு உயர்ந்துள்ளது. கடைசியான 2009–ல் அந்த அணி உச்சத்தில் இருந்தது.

இதேபோல ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவே நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது. 6 ஆண்டுக்கு பிறகு டெஸ்டிலும், ஒருநாள் போட்டியிலும் அந்த அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.டெஸ்ட் தர வரிசையில் தென்ஆப்பிரிக்கா 2வது இடத்திலும், இங்கிலாந்து 3வது இடத்திலும், பாகிஸ்தான் 4வது இடத்திலும் உள்ளன.

இந்தியா 2 இடங்கள் பின்தங்கி 5வது இடத்தில் உள்ளது. ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இலங்கை 3வது இடத்திலும், இங்கிலாந்து 4வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 5வது இடத்திலும் உள்ளன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி