வாஷிங்டன்:-உலக பாங்கி சார்பில் ‘சர்வேதச ஒப்பிட்டு திட்டம்’ என்ற பெயரில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.இந்த ஆய்வின் அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் உலக பொருளாதாரத்தில் வலிமை வாய்ந்த நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அதில் இந்தியா 3ம் இடத்தை பெற்றுள்ளது.இதில் முதல் இடத்தை அமெரிக்காவும், 2ம் இடத்தை சீனாவும் பெற்றுள்ளன.2005ம் ஆண்டில் இந்தியா இதில் 10வது இடத்தில் இருந்தது. 2011ல் மிக வலிமையாக முன்னேறி இந்த இடத்தை பெற்றுள்ளது.
இதற்கு முன்பு பொருளாதாரத்தில் வலிமையாக இருந்த ஜப்பான், இங்கிலாந்தை இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி