அப்போது வாக்காளர்களுக்கான வரிசையில் நிற்காமல் நேரடியாக வாக்குச்சாவடிக்குள் நுழைந்து வாக்களிக்க சிரஞ்சீவி சென்றுள்ளார். அவரை இடைமறித்த வெளிநாடு வாழ் இந்தியரான வாக்காளர் ஒருவர், வரிசையில் நின்று வாக்களிக்க செல்லுமாறு வலியுறுத்தினார். இருவருக்குமிடையே சற்று நேரம் வாக்குவாதம் நீடித்தது.
பின்னர் சிரஞ்சீவி வரிசையில் நின்று வாக்களிப்பதாக கூறியதுடன் வரிசையில் போய் நின்றார். அதன் பின் வரிசையில் சென்று தனது வாக்கினை அவர் பதிவு செய்தார். சி
ரஞ்சீவியை வழிமறித்த வாக்காளரிடம் இது குறித்து கேட்டபோது, வி.ஐ.பி என்ற வரிசையில் சிரஞ்சீவி வேண்டுமானால் வாக்குச்சாவடிக்குள் நேரடியாக வாக்களிக்கலாம். ஆனால் அவரது ஒட்டு மொத்த குடும்பமும் எப்படி வாக்களிக்க அனுமதிக்க முடியும் என்று கேள்வியெழுப்பினார். சீரஞ்சிவிக்கு எதிர்ப்பு தெரிவித்த வாக்காளருக்கு ஆதரவாக அங்கு கூடியிருந்த மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி