4 மாதங்களுக்கு முன்னதாக பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நடந்த கொடுமையை தனது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் இஸ்லாமிய மதகுரு முல்லாக்கை தங்களது வீட்டுக்கு கடந்த திங்கள் கிழமை அன்று விருந்திற்கு அழைத்துள்ளனர். முல்லாக் விருந்துக்கு சென்றபோது அவரது மூக்கு மற்றும் காதை சிறுமியின் தந்தை அப்துல் காதர் வெட்டிவிட்டார் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து மாகாண போலீசார் பெற்றோர்களை கைது செய்துள்ளனர்.
பழிவாங்கும் நடவடிக்கையாக சிறுமியின் பெற்றோர்கள் மதகுருவின் கையை கட்டிவிட்டு மூக்கு மற்றும் காதை வெட்டியுள்ளனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதகுருவோ நான் எந்த ஒரு பாலியல் தொல்லையும் கொடுக்கவில்லை என்று மறுத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி