செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் சாலைகளை கலக்கும் கூகுளின் டிரைவர்கள் இல்லாத கார்கள்!…

சாலைகளை கலக்கும் கூகுளின் டிரைவர்கள் இல்லாத கார்கள்!…

சாலைகளை கலக்கும் கூகுளின் டிரைவர்கள் இல்லாத கார்கள்!… post thumbnail image
நியூயார்க்:-உலகளாவிய அளவில் சர்ச் என்ஜின்களில் முதன்மையாக ‘கூகுள்‘ திகழ்ந்து வருகிறது. இது தவிர ரோபோட்டிக் தொழில்நுட்ப துறையிலும் கூகுள் முன்னிலை வகிக்கிறது. கடந்த 2010–ம் ஆண்டில் கார்களில் தானியங்கி தொழில் நுட்பத்தை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

இந்த தொழில் நுட்பத்துடன் ஏதாவது ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து டிரைவர் இல்லாமல் தானாகவே இயங்கும் ரோபோ டாக்சிகளை உருவாக்க நினைத்து, அதற்காக சில கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ‘கூகுள்’ வலை வீசியது.
கார் உற்பத்தி தொழில் நுட்ப ரகசியங்களை கூகுளுக்கு தர விரும்பாத முன்னணி நிறுவனங்கள் அதனுடன் தொழில் ஒப்பந்தம் செய்ய முன்வரவில்லை.எனவே, தாமாகவே கார் உற்பத்தி செய்ய கூகுள் முடிவு செய்தது. அதன்படி, டிரைவரே இல்லாமல் தானாகவே இயங்கும் ரோபோ டாக்சிகளை உருவாக்க திட்டமிட்டது.இவை டிரைவர் இல்லாமல் பயணிகளை ஏற்றிச் சென்று குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிடும் திறன் படைத்தவை.

அதற்காக காரில் கேமராக்கள், ரேடார்கள் போன்ற கம்ப்யூட்டர் தொழில் நுட்பங்களை தனது சொந்த நிறுவனம் மூலம் கூகுள் பொருத்தியுள்ளது.இந்த கார்களால் சாலை விபத்துகள் மிகவும் குறைவாக இருக்கும். சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படாது. போக்குவரத்து துறையையே இக்கார்கள் அடியோடு மாற்றிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த கார்கள் தயாரிக்கும் பணிகள் முடிவடைந்து, தற்போது, அமெரிக்காவின் கலிபோர்னியா சாலைகளில் சோதனை ஒட்டம் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக, தானியங்கி தொழில்நுட்பத்தை மட்டும் நம்பாமல், அசம்பாவித சூழ்நிலைகளை கையாள்வதற்கு ஏற்ற வகையில் காரின் முன் இருக்கையில் தேர்ச்சி பெற்ற ஒரு டிரைவரும் அமர்ந்து செல்கிறார்.

முற்றிலும் தானியங்கி தொழில்நுட்பத்தின் மூலம் இந்த கார்கள் இயங்கக் கூடிய சாதனை குறியீட்டை எட்டி விடுவோம் என்று இந்த அதிநவீன கார் தயாரிப்பின் திட்ட இயக்குனர் க்ரிஸ் அர்ம்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.2017ம் ஆண்டுக்குள் அனைத்து வகையான சோதனை கட்டங்களும் நிறைவடைந்து, இந்த டிரைவர் இல்லா கார்கள் தனிப்பட்ட வாடிக்கையாளர்களின் தேவைக்கு விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி