இதற்காக கடந்த வருட இறுதியில், தனது கன்னங்களை மெலிதாக மாற்றுவதற்காக தொடர்ச்சியாக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். தாடையை கூராக்கவும், மூக்கினை நீளமாக மாற்றவும், கண்களை பெரிதாக மாற்றவும் அவர் தொடர்ந்து அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார்.அறுவை சிகிச்சைக்கு பின்பு தழும்புகள் நீங்கிய பின்னர் தனது முக தோற்றத்தை புகைப்படங்களாக எடுத்து அவற்றை இணையதளத்தில் வெளியிட்டார்.
அந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் சிகிச்சைக்கு பின்பு அவரது முகம் ஹாரி பாட்டர் படத்தில் வரும் டாபி என்ற குட்டி சாத்தான் போன்ற உருவத்தையே அது பிரதிபலிக்கிறது என ரசிகர்கள் அவரை கேலியும், கிண்டலும் செய்தனர்.ஓர் அழகான இளம்பெண் தன்னை கெடுத்து கொள்வதற்காக ஏன் அறுவை சிகிச்சை செய்து கொண்டார் என்றும் சிலர் கூறியுள்ளனர். ஆனால் ரீனா, தனது புதிய முகம் தனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றும் அதனை குறை சொல்பவர்கள் பொறாமைக்காரர்கள் என்றும் கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி