செய்திகள் எகிப்தில் 683 பேருக்கு தூக்கு!…

எகிப்தில் 683 பேருக்கு தூக்கு!…

எகிப்தில் 683 பேருக்கு தூக்கு!… post thumbnail image
கெய்ரோ:-எகிப்தில் கடந்த 1981 முதல் 2011ம் ஆண்டு வரை ஹோஸ்னி முபாரக் அதிபராக இருந்தார். ராணுவ சர்வாதிகாரியான அவர் மக்கள் புரட்சி மூலம் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்டார்.அதை தொடர்ந்து கடந்த 2012ம் ஆண்டு ஜனநாயக முறையில் தேர்தல் நடந்தது. அதில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியை சேர்ந்த முகமது மோர்சி அமோக வெற்றி பெற்று புதிய அதிபர் ஆனார்.

ஆனால், அவரது நடவடிக்கைகள் பிடிக்காததால் எதிர்ப்பாளர்கள் நெருக்கடிகள் கொடுத்தனர். அதனால் அவர் பதவி இழந்தார். அதை தொடர்ந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.எனவே மோர்சியை மீண்டும் அதிபராக்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு 14ம் தேதி கெய்ரோவில் போராட்டம் நடத்தினர்.

அதில், ஏராளமானவர்கள் உயிரிழந்தனர்.இது தொடர்பாக கெய்ரோ கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.அந்த வழக்கில் நீதிபதி யூசுப் சப்ரி தீர்ப்பளித்தார். அதில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு தலைவர் முகமது பாடீ உள்பட 683 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.இதே போன்று இன்னொரு கலவர வழக்கில் கடந்த மாதம் 529 பேருக்கு அதிரடியாக மரண தண்டனை விதிக்கப்பட்டது. அதற்கு சர்வதேச நாடுகள் கண்டனம் தெரிவித்தன.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி