சென்னை:-‘கோச்சடையான்‘ படத்திற்கு ரஜினி கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பது உறுதிசெய்யப்பட்டது.ரஜினி ஜோடியாக அனுஷ்காவும், இந்தி நடிகை சோனாக்ஷி சின்ஹாவும் நடிக்கின்றனர். சாருலதா படத்தை இயக்கிய, பொன்குமரன் சொன்ன கதையை தான் தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்க உள்ளார்.
பொன்குமரன் சொன்ன கதையை ரஜினியிடம், ரவிக்குமார் சொல்ல, ரஜினிக்கு அக்கதை மிகவும் பிடித்து போனதால் இந்தப்படத்தில் நடிக்க சம்மதித்தார்.ஒருபக்கம் கோச்சடையான் பட ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வந்தாலும், ரவிக்குமார் இயக்கும் படத்திலும், மும்முரமாக கதை விவாதத்தில் மிக ஆர்வமாய் பங்கேற்று வருகிறார் ரஜினி.
இதற்கிடையே இப்படத்திற்கு ‘லிங்கா‘ என பெயர் வைத்துள்ளனர். இதனை கில்டு சங்கத்திலும் ரவிக்குமார் முறையாக பதிவு செய்துள்ளார்.ராக்லைன் வெங்கடேஷ் இப்படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறார். மே 2ம் தேதி முதல் மைசூரில், லிங்கா படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி