மோடி தன்னை சந்தித்தது பற்றி ரஜினிகாந்திடம் கேட்ட போது, ‘‘மோடி எனது நெருங்கிய நன்பர் அந்த வகையில் என்னை சந்தித்தார்’’ என்று கூறினார்.இது தொடர்பாக ரஜினிகாந்தின் மனைவி லதா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார்.அப்போது ரஜினி,மோடி சந்திப்பு குறித்து அவரிடம் கேட்டபோது, நரேந்திரமோடி ரஜினியின் மிக நெருங்கிய நன்பராவார்.
ரஜினிகாந்த் உடல் நலம் இல்லாமல் ஆஸ்பத்திரியில் இருந்தபோது மோடி நேரில் வந்து பார்த்தார். இப்போது அவர் எங்கள் வீட்டுக்கு நேரடியாக வந்து எங்களை சந்தித்தது உள்ளார். இதனால் நாங்கள் அவரை எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே கருதுகிறோம். அவர் எங்கள் வீட்டுக்கு வந்து எங்களை கவுரவபடுத்தி விட்டார் என்று கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி