சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் தனது 55வது படத்தில் நடித்து வருகிறார். முதல் முறையாக கவுதம் மேனனுடன் கைகோர்த்திருக்கும் அஜித் இப்படத்தில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் வரவிருக்கிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியுள்ளது.
அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இப்படத்தை சத்ய சாய் மூவிஸ் சார்பில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். டான் மெகர்துர் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.அஜித் ஏற்கனவே முந்தைய படங்களில் பஞ்ச் வசனங்கள் பேசி உள்ளார். ஆனால் சமீபத்திய படங்களில் பஞ்ச் வசனங்கள் இடம் பெறுவதை தவிர்த்து வந்தார்.
ஆனால் கவுதம்மேனன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தில் பஞ்ச் வசனம் இடம் பெற அனுமதித்துள்ளார். அதில் ஒரு பஞ்ச் வெளியாகியுள்ளது.
நாலு நாள்ல ஊரே கிறிஸ்துமஸ் கொண்டாடும். எனக்கு மட்டும் அன்னிக்கு தீபாவளிடா. என்னும் பஞ்ச் வசனத்தை பேசுகிறாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி