செய்திகள்,முதன்மை செய்திகள் முதல் முறையாக ஒரே நேரத்தில் 2 போப் ஆண்டவர்களுக்கு புனிதர் பட்டம்!…

முதல் முறையாக ஒரே நேரத்தில் 2 போப் ஆண்டவர்களுக்கு புனிதர் பட்டம்!…

முதல் முறையாக ஒரே நேரத்தில் 2 போப் ஆண்டவர்களுக்கு புனிதர் பட்டம்!… post thumbnail image
வாடிகன்:-வாடிகன் நகரத்தின் வரலாற்றில் முதல் முறையாக முன்னாள் போப்புகள் இருவருக்கு ஒரே நாளில் புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று தற்போதைய போப் பிரான்சிஸ் அறிவித்திருந்தார். வாழும் காலத்தில் அற்புதங்களை நிகழ்த்தி காட்டிய கத்தோலிக்க கிறிஸ்தவ மத குருமார்களுக்கு இத்தாலியில் உள்ள வாடிகன் ‘புனிதர்’ பட்டம் வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், ஆட்சி மாற்றம், நோயிலிருந்து விடுதலை, ஏழ்மை மீட்சி போன்ற வியத்தகு செயல்களில் ஈடுபட்டு 2 அற்புதங்களை புரிந்த முன்னாள் போப்புகளில் சிலருக்கு புனிதர் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 1958ம் ஆண்டில் இருந்து 1963 வரை போப்பாக இருந்த போப் 23வது ஜான் மற்றும் 1978ம் ஆண்டில் இருந்து 2005 வரை போப் பதவியை 27 ஆண்டுகள் வகித்த போப் இரண்டாம் ஜான்பால் ஆகியோருக்கு ஒரே நேரத்தில் புனிதர் பட்டம் வழங்கும் விழா வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நேற்று நடைபெற்றது.இதில் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதனால் வாடிகன் நகரமே விழா கோலம் பூண்டிருந்தது. நேற்று காலை நடைபெற்ற புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் போப்பாண்டவர் பிரான்சிஸ் பங்கேற்றார்.

மறைந்த போப் ஆண்டவர்கள் 2ம் ஜான்பால், 23ம் ஜான் ஆகியோருக்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ், புனிதர் பட்டம் வழங்கினார். இதையொட்டி, வாடிகன் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.நிகழ்ச்சியில், முன்னாள் போப் ஆண்டவர் 16ம் பெனடிக் கலந்து கொண்டார். 100 வெளிநாட்டு பிரதிநிதிகள், இத்தாலி அரசு பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். புனிதர் பட்டம் பெற்றவரின் பெயரால் உலகில் எந்த ஓர் இடத்திலும் ஆலயம் எழுப்பி அவருக்கு வணக்கம் செலுத்த கத்தோலிக்க திருச்சபை அனுமதி அளித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி