அதற்கு பதில் அளித்த அமெரிக்க அதிபர் ஒபாமா, வட கொரியா இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் சர்வதேச நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்படும். மேலும் பல பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என எச்சரித்தார்.இது வட கொரியாவுக்கு கடும் எரிச்சலையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதை பிரபலிக்கும் வகையில் இந்நாட்டு அதிபர்களையும் ஆபாச வார்த்தைகளால் கடுமையாக தாக்கியுள்ளது.இதுகுறித்து வட கொரியாவின் கொரியா சமாதான மறு சீரமைப்பு கமிட்டி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கடந்த சில நாட்களாக தென் கொரிய அதிபர் பார்க் மற்றும் அமெரிக்க அதிபர் ஒபாமா ஆகியோரின் நடவடிக்கைகள் மிகவும் கீழ்த்தரமாக உள்ளது.
தென்கொரிய அதிபர் பார்க் அறிவு வளர்ச்சியற்ற ஒரு பெண்.அவரின் செயல் தனக்கு பிடிக்காதவர்களை ரவுடிகளை ஏவிவிட்டு தாக்கும்படி கெஞ்சுவது போன்று உள்ளது.
அல்லது ஒரு புத்திசாலித் தனமான விபசாரி ஒருவரை அழிக்க பலமிக்க புரோக்கர் ஒருவரிடம் தனது உடலை விற்பது போன்று கருத வேண்டியுள்ளது.அவர்கள் இருவரும் வேறு நாட்டின் விவகாரஙக்ளில் தலையிடுவதை சகித்து கொள்ள முடியாது. ஒபாமாவும்,பார்க்கும் எங்கள் மீதான மிரட்டல் மற்றும் பிளாக் மெயிலை நிறுத்தி கொள்ள வேண்டும்.அவர்கள் முட்டாள் தனமான மிரட்டல்களுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என கூறப்பட்டு உள்ளது.வடகொரியாவின் இந்த செயல்,ஒழுக்கங்கெட்ட செயல் என தென் கொரியா கண்டனம் தெரிவித்து உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி