மும்பை:-’மா துஜே சலாம்’, ’பாகி’, ’கிலாடியோன் கா கிலாடி’ போன்ற படங்களில் நடித்துள்ள இந்தர் குமார் சர்ஃப் மும்பையின் அந்தேரி பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாக போலீசில் புகார் அளித்து, விவாகரத்துக்கு ஏற்பாடு செய்து வரும் இவரது மனைவி தனியே வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவரது வீட்டின் அருகே உள்ள தனது குடியிருப்புக்கு ஒரு மாடல் அழகியை வரவழைத்த இந்தர் குமார், கதாநாயகி வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி அவரை கற்பழித்தார்.
மேலும், அவரை வெளியே போக விடாமல் வீட்டினுள் அடைத்து வைத்து பீர் பாட்டிலால் அடித்தும், சிகரெட்டால் சூடு வைத்தும் அந்த நடிகர் இரவு முழுவதும் தன்னை சித்ரவதை செய்ததாக அவரிடம் இருந்து தப்பி வந்த மாடல் அழகி போலீசில் புகார் அளித்தார்.
அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இந்தர் குமாரை கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி