முக்கிய பாத்திரத்தில் ப்ரீத்திபால், நந்துவும் நடித்திருக்கிறார்கள். மேலும் அருண், தம்பிராமையா, தலைவாசல் விஜய், அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர்.இப்படத்தின் ஒளிப்பதிவை சஞ்சீவ் சங்கர் செய்திருக்கிறார். விஷ்ணு மோகன் சித்தாரா இசையமைத்திருக்கிறார்.‘சேர்ந்து போலாமா’ படம் முழுக்க முழுக்க நியூசிலாந்தில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் வசிக்கும் முக்கிய நாடுகளில் நியூசிலாந்தும் ஒன்று. இங்கு ஆக்லேண்ட் என்பது அழகான நகரமாகும்.
இந்நகரத்திலிருந்து சவுத் ஐலண்ட் எனப்படும் தெற்கு தீவுக்குக் கதை நகர்கிறது.
நியூசிலாந்தின் பெரிய நகரங்கள், வெலிங்டன் துறைமுகம், லைட்ஹவுஸ் போன்ற பல முக்கிய இடங்களிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது.தற்போது படப்பிடிப்பு முடிந்து விட்டநிலையில், இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் இப்படம் வெளிவரவுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி