செய்திகள்,திரையுலகம் பள்ளிக்கூடம் கட்டுட நிதி சேர்க்கும் ஜாக்கிசான்!…

பள்ளிக்கூடம் கட்டுட நிதி சேர்க்கும் ஜாக்கிசான்!…

பள்ளிக்கூடம் கட்டுட நிதி சேர்க்கும் ஜாக்கிசான்!… post thumbnail image
ஹாங்காங்:-வசதி இல்லாத ஏழை குழந்தைகள் படிப்பதற்காக ஒரு பள்ளி தொடங்க வேண்டும் என்பது ஜாக்கிசானின் நீண்டகால ஆசையாம்.அதனால் தனது ‘டிராகன்ஸ் ஹார்ட்’ என்ற அறக்கட்டளை மூலம் ரசிகர்களிடம் நிதி திரட்டி அந்த பள்ளியை தற்போது கட்டத் தொடங்கியிருக்கிறார்.

ஏற்கனவே ரசிகர்கள் அவரது அறக்கட்டளைக்கு நிதி கொடுத்து வரும் நிலையில், சமீபத்தில் பீஜிங், ஷாங்காய் போன்ற பகுதிகளுக்கு அவர் சென்றபோது அங்குள்ள ஏராளமான ரசிகர்கள் நிதி கொடுத்தார்களாம்.அதையடுத்து, இதுவரை சேர்ந்த நிதியை எண்ணும் பணியில் இறங்கிய ஜாக்கிசான், 90 ஆயிரம் ஹாங்காங் டாலர்கள் சேர்ந்திருப்பதைக் கண்டு இன்ப அதிர்ச்சியடைந்தாராம். அதையடுத்து தனது சார்பிலும் 90 ஆயிரம் டாலர்களை அந்த நிதியோடு சேர்த்து விட்டாராம்.

அதுமட்டுமின்றி, தனது நடிப்பில் வெளியான ‘சி இசட் 12’ படத்தின் மேக்கிங் புத்தகத்தை ரசிகர்களிடம் விற்பனை செய்த வகையில் கிடைத்த 50 ஆயிரம் ஹாங்காங் டாலர்களையும் இப்போது அந்த நிதியோடு சேர்த்துள்ளாராம் ஜாக்கிசான். ஆக, 2 லட்சத்து 30 ஆயிரம் ஹாங்காங் டாலர்கள் அவர் பள்ளிக்கூடம் கட்டுவதற்கான நிதியாக சேர்ந்துள்ளதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி