ஐதராபாத்:-நடிகரும், மத்திய மந்திரியுமான சிரஞ்சீவி ஆந்திர மாநிலத்தில் உள்ள மசூலிப்பட்டணத்தில் நேற்று காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.பா.ஜ.க., தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் நிலைப்பாடுகளை இந்த கூட்டத்தில் கடுமையாக விமர்சித்துப் பேசிய அவர், பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும் வெகுவாக தாக்கிப் பேசினார்.
வாஜ்பாய், அத்வானி போன்ற மூத்த தலைவர்களை ஒரங்கட்டியவர் என்றும், கொடுன்கோலன் என்றும், ஹிட்லர் என்றும் அவர் அடுக்கடுக்காக மோடியை விமர்சித்துப் பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் சிரஞ்சீவி மீது முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதனால், நிலைகுலைந்துப் போன அவர் சில நிமிடங்கள் பேச்சை நிறுத்தி விட்டு மவுனமாக நின்றிருந்தார். அவரது பேச்சை கேட்டுக்கொண்டிருந்த மக்கள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததும் அவர் தொடர்ந்து பேசி விட்டு அங்கிருந்து சென்றார்.இச்சம்பவம் தொடர்பாக இருவரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி