சென்னை:-தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதுதான் உதயநிதிக்கும், சந்தானத்துக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது உதயநிதியை முதலாளி என்று அழைக்க ஆரம்பித்தார் சந்தானம்.ஒரு கல் ஒரு கண்ணாடி, இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களில் நடித்தபோதும் முதலாளி என்றுதான் அழைப்பார்.
அப்படி அழைக்க வேண்டாம் என்று உதயநிதி பல தடவை சந்தானத்திடம் சொல்லிப்பார்த்திருக்கிறார். சந்தானம் கேட்கவில்லை. உதயநிதியை அவர் இப்படி அழைக்க காரணம் வெறும் நட்பு மட்டும் இல்லையாம். அப்புறம்?
வெகுகாலமாக தீராமல் இருந்த சந்தானத்தின் சொத்து பிரச்னை ஒன்றை, உதயநிதி தான் தலையிட்டு தீர்த்து வைத்தாராம். அந்த நன்றிக்கடக்காக உதயநிதியை முதலாளி என்று அழைப்பதை நிரந்தரமாக்கிக் கொண்டாராம் சந்தானம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி